Monday, April 26, 2010

தமிழ்க்கவிஞன்

 தமிழ்க்கவிஞன் 
உன் காதலனாய் நானிருத்தல் வேண்டும் இல்லை 
உன் சேவகனாய்  வாழ்ந்திருத்தல் வேண்டும் -தமிழே 
என் சித்தத்தில் உன் அழகை கண்டிருக்கிறேன் 
நான் மொத்தத்தில் உன்னிலே நின்றிருக்கிறேன் 
சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய் 
நாடுகள் நலம் பெற விதைத்துவிட்டாய் 
நாட்டுக்கு நான் வாழ விரும்பவில்லை 
தமிழ் பாட்டுக்கு தான் வாழ விரும்புகிறேன்
ஆசி அளிப்பாயாக ;

கண்ணம்மா

 கண்ணம்மா 
காணும் கருமையல்லாம் கண்ணம்மா 
உன் கருங்கூந்தல் தெரியுதடி 
பார்க்கும் இடங்களெல்லாம் கண்ணம்மா 
உன் பார்வை தோன்றுதடி 
காணும் காட்சியல்லாம் கண்ணம்மா 
உன் உருவம் மட்டுமடி 
பேசும் வார்த்தை எல்லாம் கண்ணம்மா 
கவிதையாய் மாறுதடி 
என்னை கவிஞனாக்குதடி

வாழ்க்கை

 வாழ்க்கை 
கருவறை புழுக்கத்தால் 
காற்றாட வந்தவர் நாம் 
கடைசியில் போகும்போது 
காற்றிழந்து போகின்றோம் 
வையகம் வந்தோம் 
வாழ்க்கையை வெல்ல 
கானகம் சென்றோம் 
கலியுகம் என்றோம்