தமிழ்க்கவிஞன்
உன் காதலனாய் நானிருத்தல் வேண்டும் இல்லை
உன் சேவகனாய் வாழ்ந்திருத்தல் வேண்டும் -தமிழே
என் சித்தத்தில் உன் அழகை கண்டிருக்கிறேன்
நான் மொத்தத்தில் உன்னிலே நின்றிருக்கிறேன்
சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
நாடுகள் நலம் பெற விதைத்துவிட்டாய்
நாட்டுக்கு நான் வாழ விரும்பவில்லை
தமிழ் பாட்டுக்கு தான் வாழ விரும்புகிறேன்
ஆசி அளிப்பாயாக ;
No comments:
Post a Comment