காக்கைச்சிறகினிலே காதல் உரைத்தேன்
காக்கை காதலி யாரென கேட்டது
கனம் நொடி யோசித்தேன்
கணம் கொண்டு மனம் வலித்தது
காதலி தான் எனக்கில்லை நீயனக்
குரைப்பாயா என்றேன்
நீல வண்ணம் கொண்ட நீளமான
வானத்தை காதல் செய் என்றது
அவளுக்குத்தான் எல்லையே இல்லை
அவளை தேடினால் ஏன் தேடலுக்கு முடிவில்லை
மண்ணிலே உயர்ந்த உயர்
சிகரத்தை காதல் செய் என்றது
நான் அவளோடு உரையாடினால் ஏனோ
அவள் மௌனம் கொள்கிறாள்
பச்சை தனை உடலை கொண்ட
பசுந்தாவரத்தை காதல் செய் என்றது
அவள் மட்டும் பேசிடுவாளா
உடலில் பசுமையும் பேச்சில் வறுமையும் கொண்டவள்
-அப்படியானால்
உன்னை காதலிக்கும் பெண்ணைத்
தேடி காதல் செய்
என்னையும் ஒரு பெண் காதலித்தால் ஏனோ
எந்தை வேண்டாம் என்கிறார் என்று சொல்லி பிரிந்துவிட்டால்
விக்னபாரதி
2 comments:
It's really good.You have a great future. I support you.All the very BEST.
i love youuuuuuuuuuuu
it's really nice
Post a Comment